அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையமைப்பில்,இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கதில், பிரபுதேவா ‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தத்திரைப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கின்ற நிலையில், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, வை.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
‘சார்லி சாப்ளின்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சக்தி சிதம்பரம்- பிரபுதேவா கூட்டணி தற்போது 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது.
'ஜாலியோ ஜிம்கானா' First Look போஸ்டர் தற்போது வெளியாகி, இரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.