Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
பிரபல WWE வீரர் John Cena ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..

Gossip Sooriyan Fm - பிரபல WWE வீரர் John Cena ஓய்வு பெறுவதாக அறிவிப்பு..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

99 Views
பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா WWE போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.90S கிட்ஸ்களின் மனதை வென்ற மல்யுத்த வீரர் என்றால், அது ஜோன் சீனா தான். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் WWE விளையாட்டில் முடி சூடா மன்னனாக திகழ்ந்துவருகிறார்.

2018 ஆம் ஆண்டுவரை WWE இல் முழுமையாக கவனம் செலுத்தி வந்த ஜோன் சீனா, அதன் பின்னர் ஹொலிவூட்டில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். இதனால் ஜோன் சீனாவால் WWE தொடரில் பெரிய அளவில் விளையாட முடியவில்லை.

இந்நிலையில் ஜோன் சீனா 2025 ஆம் ஆண்டு Wrestlemania தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக கனடாவில் டோராடூன் நகரில் நடைபெற்ற WWE நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஜோன் சீனா, தன்னுடைய முடிவை அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் பணியாற்றி வருகின்றேன். 20 ஆண்டுகள் வரை நான் இரசிகர்களின் அன்புக்கு பாத்திரமாகத் திகழ்ந்தேன்.
 
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு நண்பர்கள் இல்லாமல் போகலாம். எனது பெயர் யாருக்கும் தெரியாமல் கூட போகலாம். நான் பல கஷ்டங்களையும் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் எப்போதுமே என்னுடன் WWE இரசிகர்கள்தான் துணை நின்று எனக்கு ஆதரவு கொடுத்துள்ளீர்கள்.
 
இதனால் தான் WWE போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து இருக்கிறேன். 2025 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து WWE இணையத்தளத்திற்கு மாறுகிறது. இது ஒரு புதிய வரலாறு ஆகும். அந்த வரலாற்றிலும் இடம்பெறப் போகிறேன். 2025 ஆம் ஆண்டு நடைபெறும் ரோயல் ரம்பிள், எலிமினேஷன் சேம்பர் மற்றும் Wrestlemania போன்ற தொடர்களில் பங்கேற்பேன்.

Wrestlemania தொடர் தான் என்னுடைய கடைசிப் போட்டியாக இருக்கும். அதிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். இரசிகர்களிடம் முன்கூட்டியே தெரிவித்து , அவர்களிடம் நன்றி தெரிவிக்கவே இங்கு நான் வந்தேன்.

WWE வீரனாக என்னுடைய கடைசி அத்தியாயம் தொடங்குகின்றது என்று ஜோன் சீனா இரசிகர்கள் மத்தியில் கூறினார். ஜோன் சீனாவின் இந்த அறிவிப்பினால் அவரது இரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top