பொதுவாகவே பேரீச்சம்பழம் உடலில் உள்ள நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றது. இதில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு முழுமையான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கும் இந்தப் பழத்தை தினமும் தேனுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் ரீதியாக பல மாற்றத்தைக் காணலாம்.
விதையில்லாத பேரீச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, பின் 3 நாட்கள் கழித்துச் சாப்பிட வேண்டும்.அப்படிச் சாப்பிடும் போது என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நமது உடல் உறுதியாகும்.அதாவது எலும்புகளுக்கு வலுச் சேர்க்க விட்டமின் D பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்வதால் எலும்புகள் பலம் பெற்று உடல் உறுதியாகும். பொட்டாசியம் நிரம்பிய பேரீச்சம்பழமானது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தச் சோகையை நீக்கி இதயத்திற்கு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பேரிச்சம் பழம் கெட்ட கொலஸ்ட்ரோலைக் குறைப்பதில் சிறந்தது. எனவே, தினமும் பேரிச்சம்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரோலின் அளவைப் பராமரித்திடலாம்.
பேரீச்சம் பழத்தில் மெக்னீஷியம் மற்றும் தசை வீக்கத்தை குறைக்கும் தன்மை உள்ளதால் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றில் இருந்து முழுமையான நிவாரணம் தரும்.
பொதுவாக குளிர் காலங்களில் நாம் மந்தமாகவும், சோர்வாகவும் இருப்போம்.எனவே, பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் எமக்கு அதிக ஆற்றல் கிடைக்கும். பேரிச்சம் பழத்தில் உள்ள விட்டமின் C,D ஆனது தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.
எனவே, பல நன்மைகள் நிறைந்த பேரீச்சம்பழத்தை உட்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்!