இந்தச் சம்பவம் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சிறிய தண்டனைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வளரும் குழந்தைகள், தோல்விகளைக் கையாளத்தெரியாத குழந்தைகள், அவர்கள் நினைத்ததை அடைவதற்காக தவறான வழிகளைத் தெரிவு செய்கின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் காணப்படும் கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், சீருடை அணியாமல் பாடசாலைக்கு சமூகமளித்திருந்ததினால் அவரது வகுப்பாசிரியர் குறித்த மாணவரைக் கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியரின் தலையில் சரமாரியாக குத்தியுள்ளார். இதன் காரணமாக படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.
எனினும், அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாகவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து, குறித்த மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.