கோப்பித் தூள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் சரும அழகை அதிகரித்துக் கொள்வதற்கும் பெரும் பங்காற்றுகின்றது.
சவர்க்காரத்திற்குப் பதிலாக கோப்பித்தூளுடன் சிறிதளவு கற்றாழை ஜெல்லைக் கலந்து உடல் முழுதும் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் விரைவாக நீங்குவதுடன் பருக்களும் வராமல் இருக்கும்.
இரண்டு தேக்கரண்டி பாலுடன் ஒரு தேக்கரண்டி கோப்பித்தூளை சேர்த்து சிறிது எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்து நன்கு கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்து வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் சருமத்தில் இருக்கும் துளைகள் முழுமையாக நீங்கி சருமம் எப்பொழுதும் இளமையான தோற்றத்துடன் இருக்கும்.
கோப்பித்தூளுடன் ஒலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து சருமம் முழுவதும் மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் சருமம் பளபளப்பாகும்.
கோப்பித்தூளில் Antioxidant அதிகமாக உள்ளமையால் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வடிகட்டிய கோப்பித்தூளை எடுத்து கண்களின் கீழ் உள்ள வீக்கங்கள் மீது பூசி சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும்.
எனவே கோப்பித்தூளைப் பயன்படுத்தி சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வோம்.