இந்த நிலையில் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் வசித்து வரும் நபர் ஒருவர், தன்னைக் கடித்த பாம்பினை பழிவாங்கும் விதமாக 3 முறை திருப்பிக் கடித்ததில் அந்த பாம்பு உயிரிழந்துள்ளது.
35 வயதான இவர் காட்டுப்பகுதி ஒன்றில் தொடருந்துப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாகப் பாம்பு கடித்தவுடன், அதிகமானவர்கள் பீதியடைவார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக, ஆத்திரமடைந்த இவர் அந்தப் பாம்பைப் பிடித்து, அதனை மூன்று முறை கடித்துள்ளார், இதன் காரணமாக அந்தப் பாம்பு உயிரிழந்துள்ளது.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், தனது கிராமத்தில், பாம்பு கடித்தால், உடனே அந்த பாம்பைத் திருப்பிக் கடிப்பதால் அந்த விஷம், பாம்பிற்கே திரும்பிப் போய்விடும் என்று ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் இதன் காரணமாகவே அதனைக் கடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த தொழிலாளி தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர் குணமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.