மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான Whatsapp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இனி Whatsapp மெட்டா A.I மூலம் போட்டோக்களுக்கு ரிப்ளை செய்யலாம், Edit செய்யலாம்.
Whatsapp சமீபத்தில் மெட்டா A.I வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில், Whatsapp மெட்டா A.I மூலம் போட்டோக்களுக்கு ரிப்ளை செய்யவும் Edit செய்யவும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கு புதிய Chat பட்டன் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம் போட்டோக்களை Chat செய்து, அது பற்றிய கேள்விகளையும் கேட்கலாம்.
அத்தோடு மெட்டா A.I மூலம் படங்களை Edit செய்யலாம். அந்த படங்களுக்கான Control பயனரிடம் இருக்கும். அவர்கள் எந்த நேரத்திலும் Delete செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம் தற்போது சோதனைச் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.