இருப்பினும் இளமையான தோற்றத்தை எம்மால் தக்க வைத்துக்கொள்ள முடியும். ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியினால் எமது இளமையை மேம்படுத்த முடியும். எனவே இயற்கையான முறையில் இளமையை எவ்வாறு தக்க வைப்பது என்று இந்தப் பதிவில் காணலாம்.
பொதுவாக எமது உடலில் நீரிழப்பு ஏற்படுவதனால் சருமம் வறண்டு முதுமையான தோற்றம் எமக்கு விரைவிலேயே வந்துவிடும். எனவே அதிக தண்ணீர் குடிப்பது எமது ஆரோக்கியத்தினையும் இளமையையும் பாதுகாக்க பெரிதும் துணைபுரிகிறது. அத்துடன் கரட், பீட்ரூட் போன்றவற்றை ஜூஸ் செய்து குடித்து வருவதும் இளமையான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.
புகை பிடித்தலினால் ஏற்படும் தீங்கான விளைவுகள் வயதான செயல்முறைக்கு துணைபுரிகிறது. அதாவது புகை பிடிப்பதால் உடலில் உள்ள கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களை சேதப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மற்றும் தோல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்படும். ஆகவே ஆரோக்கியமாக இளமையாக இருக்க புகைபிடித்தலை தவிர்ப்பது நல்லது.
மேலும் இளமையைத் தக்க வைக்க அன்றாடம் தக்காளி ஜூஸ் குடிப்பது சிறந்ததாகும். தக்காளியில் Antioxidant அதிகம் உள்ளதால், சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
அத்துடன் கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், சருமத்தில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, சருமமானது இளமையுடன் காட்சியளிக்கும்.
இளமையைத் தக்க வைத்துக்கொள்ள அன்றாடம் அதிக பழங்களை உண்பதும் நல்ல பலனைக்கொடுக்கும். எனவே இயற்கையான ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிச்சி மூலம் உங்கள் இளமையைக் காத்திடுங்கள்.