விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் "மழை பிடிக்காத மனிதன்".
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.
சரத்குமார் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.மேலும் டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன், பிருத்வி அம்பெர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படம் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகுமென படக்குழு போஸ்டர் ஒன்றினைப் பகிர்ந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில்,இந்தப் போஸ்டர் இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.