இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்பு நாய்க்கு, இந்திய மதிப்பில் சுமார் 3 இலட்சம் பெறுமதியான தங்கச்சங்கிலி ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பெரும்பாலானவர்கள் தங்களின் செல்லப்பிராணிகளின் மேல் அளவுக்கதிகமான அன்பினை வெளிக்காட்டுவார்கள். அந்த அடிப்படையிலேயே இந்தச் சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்தப் பெண், தனது வளர்ப்பு நாயின் பிறந்த நாளைக் கொண்டாடும் முகமாக இந்திய மதிப்பில் சுமார் 3 இலட்சம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார்.
குறித்த பெண் தங்கச்சங்கிலியை அவரது நாய்க்கு அணிவித்த சந்தர்ப்பத்தில், அதனைக் காணொளியாக பதிவு செய்த குறித்த நகைக்கடை நிறுவனத்தினர் அதனைத் தங்களின் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.
குறித்த இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளதுடன் பலரும் இதற்கு தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.