SooriyanFM Gossip - நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் குருதிநெல்லிப் பழம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
494 Views
நாம் பல வகையான பழ வகைகளை உண்டு ருசித்திருப்போம். அந்த வகையில் குருதிநெல்லிப் பழம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்தப் பழம் அதிக சுவையைத் தருவதுடன் மிகுந்த ஆரோக்கியத்தையும் தருகிறது.
குடலியக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நார்ச்சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன. அத்தகைய நார்ச்சத்துக்கள் குருதிநெல்லிப் பழத்தில் அதிகமாக உள்ளன. இதனால் வாரம் இருமுறை இந்தப் பழத்தை உட்கொள்வது சிறந்ததாகும்.
இந்தப் பழத்தை உட்கொள்வதனால் இரத்த அழுத்தம் மட்டுப்படுத்தப்படுகின்றது. அத்துடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் இந்தப் பழத்தை உட்கொள்ளலாம்.
குருதிநெல்லிப் பழச்சாற்றை தினமும் ஒரு கப் தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம். இதனால் உடல் எடை சீராகக் காணப்படும்.
வாரம் இருமுறை இரண்டு கப் குருதிநெல்லிச்சாற்றை அருந்துவதனால் நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகின்றது.
எனவே மகத்தான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள குருதிநெல்லிப் பழத்தை உட்கொண்டு பலன் பெறுவோம்.