பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், 2021 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த திரைப்படம் 'புஷ்பா'.
இத்திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.மேலும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் இத்திரைப்படம் பெற்றுக் கொடுத்துள்ளது.
இத்திரைப்படம், வசூல் ரீதியாக இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி வசூல் சாதனைப் படைத்துள்ளது.
இந்நிலையில், 'புஷ்பா பாகம் 2' திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தில், முதல் பாகத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா மற்றும் பஹத்பாசில் ஆகியோர் இத்திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே,இந்திய மதிப்பில் 250 கோடியை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'புஷ்பா 2' வெளியாகி தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் பல புதிய சாதனைகளைப் படைக்கும்” என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.