மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ்ஸின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் காற்றில் இருந்து வெண்ணெய் தயாரித்துள்ளது.
தெர்மோகெமிக்கல் முறையில், காற்றில் உள்ள கார்பன் டை ஒக்சைட் (CO2) கார்பன் அணுக்களும், நீராவியில் இருந்து ஹைட்ரஜன் அணுக்களும் சேகரிக்கப்பட்டு, ஒன்றாகக் கொண்டு வந்து ஒக்ஸிஜனேற்றப்பட்டு வெண்ணெய் தயாரிக்கப்படுகிறது.
இதில் விலங்கு அல்லது காய்கறி கொழுப்புகள் பயன்படுத்தப் படுவதில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புவி வெப்பமடைதலுக்கு காரணமான CO2 உடன் வெண்ணெய் தயாரிப்பது ஒருவிதத்தில் சுற்றுச்சூழலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது.
இந்த வெண்ணெயின் சுவை நன்றாக இருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.