கடந்த 1987 ஆம் ஆண்டு இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற, தடகள போட்டியின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டெப்க்கா கொஸ்ட்டாடினோவா (Stefka Kostadinova) 2.09 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
இந்நிலையில், பாரிஸ் டயமண்ட் லீக்கில் 2.10 மீற்றர் உயரத்தை தனது முதல் முயற்சியிலேயே பாய்ந்து, 37 வருட கால உலக சாதனையை முறியடித்தார். இந்த வெற்றியின் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான உயரம் பாய்தலில், யரோஸ்லாவா மஹுச்சிக் தங்கம் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து யரோஸ்லாவா கூறுகையில், "இப்போட்டிக்கு வரும்போது 2.07 மீற்றர் உயரத்தை பாய முடியும் என்ற முழு நம்பிக்கை இருந்தது. எனினும், 2.10 மீற்றர் உயரத்தையும் பாய முடியும் என்ற சிறியளவிலான நம்பிக்கையும் எனக்குள் இருந்தது.
அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. தடகள உலகில் எனது நாட்டின் பெயரை பொறித்துள்ளேன் என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.