நாங்கள் எப்போதுமே பகல் வேளைகளில் சாதத்திற்கு ஏதாவதொரு குழம்பு வகைகளைச் சேர்த்து சாப்பிடுவதுண்டு. நாம் அநேகமாக குழம்பு வகைகள் என்றாலே மீன், கோழி, ஆடு, இறால், நண்டு, கணவாய், முட்டை போன்ற அசைவ உணவிலான குழம்பு வகைகளைத்தான் விரும்பி உட்கொள்வோம்.
குழம்பு வகைகளின் சுவையானது, ஒவ்வொரு விதமான அசைவ உணவிற்கு ஏற்றாற் போல் மாறுபடும்.
நண்டுக் குழம்பினை சமைக்க பலருக்கு ஆர்வம் இருந்தாலும்,அவர்களுக்கு சரியான அளவில் மற்றும் சரியான முறையில் இந்த நண்டுக் குழம்பினை சமைக்கத் தெரியாது.
மிகவும் இலகுவான முறையில்,தரமான சுவையில் எப்படி நண்டுக் குழம்பினை செய்வது என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நண்டுக் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்
1/4 கப் - துருவிய தேங்காய்
1 - இஞ்சி பூண்டு
6-8 கராம்பு
1/2 வெங்காயம்
1 தேக்கரண்டி நண்டுக் கறிப்பொடி
1/2 தேக்கரண்டி மிளகு
2 தேக்கரண்டி
சீனி
1 தேக்கரண்டி புளி விழுது
1 கைபிடி கறிவேப்பிலை
2 - 3 பச்சை மிளகாய்
1 கப் தேங்காய் பால்
5 - 6 நண்டுகள்
2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
உப்பு - தேவையான அளவு
நண்டு கறிப்பொடி செய்யத் தேவையான பொருட்கள்
4 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
3 தேக்கரண்டி சீரகம்
1/2 தேக்கரண்டி கடுகு
6-7 கறுப்பு மிளகு
1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
முதலில் குழம்பிற்காக எடுத்து வைத்த நண்டுகளை நன்கு கழுவி சுத்தப்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து நண்டுக் கறிப்பொடி செய்யத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் தூளாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பெரிய வாணலியில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதன் பின்னர் கறிவேப்பிலை, குடை மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து மசாலா வாசனை வரும் வரை 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கிய கலவையுடன் தொடர்ந்து புளி விழுது, சீனி , மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் 1/2 கப் தேங்காய்ப் பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அடுத்ததாக உப்பு மற்றும் நண்டைச் சேர்த்து 5 நிமிடத்திற்கு கிளறவும்.
தேங்காய்ப் பால் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்களாவது நண்டுகளை மூடி வைத்து வேக வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகளை,நண்டுக் குழம்பிற்கு மேல் தூவினால்,சுவையான மணமணக்கும் நண்டுக்குழம்பு தயார்!