புற்றுநோய் என்பது மிகவும் ஆபத்தான ஒரு நோய்.புற்றுநோயிலேயே பலவிதமான நோய் வகைகள் உள்ளன.
பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், முறையாக சிகிச்சையளிக்கப்பட்டு குணமாக்கிவிடலாம்.
அந்த வகையில், நமக்கு இந்தப் புற்றுநோய் வராமலிருக்க,சில பழக்கவழக்கங்களைத் தவிர்த்து வந்தால் எமக்கு புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
அதிகளவான நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால், சில கடுமையான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே, புற்றுநோய் வராமல் இருக்க அன்றாட நடைமுறைகளில் உடற்பயிற்சியை மேற்கொள்வது மிகவும் சிறந்தது.
அதிக நேரம் சூரிய ஒளி நமது தோலில் படுவதால் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.
எனவே, சன்ஸ்கிரீம் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை அணிதல் போன்றவற்றால் பிற ஊதாக் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் கூட புற்றுநோய் ஏற்படும்.எனவே,ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்வது சிறந்தது.
மது அருந்துவதால், பெருங்குடல், மார்பகம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்படும். அதேபோல் புகைபிடிப்பதால் சிறுநீர்ப்பை, தொண்டை மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். ஆகவே, இதனை நிறுத்துவது புற்றுநோய் எமக்கு வராமல் தடுக்கும் முதற்படியாகும்.
எனவே, நம்முடைய சில பழக்கவழக்கங்களைத் தவிர்த்துக் கொண்டால் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.