SooriyanFM Gossip - பச்சைப் பட்டாணி தரும் உடல் ஆரோக்கியம்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
355 Views
அசைவ உணவை சாப்பிடாதவர்கள் தங்கள் உடலுக்குத் தேவையான சத்துகளை தாவர உணவுகளிலிருந்தும் பெற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் என பல வகையான சைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகின்றது. அந்த வகையில் மனிதர்களுக்குத் தேவையான பல சத்துக்களை அளிக்கும் உணவாக பச்சைப் பட்டாணி இருக்கிறது. பச்சைப் பட்டாணியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். மனிதர்களின் உடலுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது எலும்புகள். அவை ஒரு மனிதனுக்கு பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். பச்சைப் பட்டாணியில் விற்றமின் (K) அதிகம் நிறைந்துள்ளது. இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உடனடியாகக் குறையும்.
பச்சைப் பட்டாணியில் மக்னீசியம் அதிகமுள்ளது. பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கங்கள் ஏற்படுவது குறையும்.
பச்சைப் பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகமாக உள்ளது. இதை சாப்பிடுவதால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை சீராகப் பேணப்படும்.
புற்றுநோய்களில் பல வகைகள் உள்ளன. அதில் வயிற்றில் ஏற்படும் வயிற்றுப் புற்று நோயும் ஒன்றாகும். பச்சைப் பட்டாணியை தினமும் 2 மில்லிகிராம் அளவிற்கு சாப்பிட்டு வரும் நபர்களுக்கு வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவடையும்.
எனவே வாரம் இருமுறை ஒரு கைபிடி அளவு பிற காய்கறிகளுடன் இந்த பட்டாணியையும் சேர்த்து உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.