மெட்டா பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், WhatsApp-இல் ஸ்டிக்கர் அம்சம் மிகவும் பிரபலமாகவுள்ளது.
எனினும் இந்த ஸ்டிக்கர்கள் சில போன்களில் அனிமேட் ஆகுவதில்லை. இதனால் பயனர்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. இது ஏன் நடக்கிறது? சரி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
இது உங்கள் போன் App -இல் உள்ள பக் (bug) காரணமாக ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. இதை சரி செய்ய, Android பயனர்கள் உங்கள் போனை ரீ-ஸ்டார்ட் செய்யலாம்.
இல்லை என்றால் மற்றொரு ஒப்ஷனும் உள்ளது. WhatsApp ஐகனை லோங்-ப்ரஸ் ( long-press) செய்யவும். பின்னர் App info பகுதிக்குச் சென்று, Alarms and Reminders ஒப்ஷனை டிஸ்ஏபிள் (disable) செய்யவும். இது ஸ்டிக்கர் Animation பக்-ஐ சரி செய்யும்.
அதன் பின்னரும் பிரச்சினை தொடர்ந்தால் Alarms and Reminders ஒப்ஷனை ரீ-எனெபிள் செய்து டிஸ்ஏபிள் செய்யவும். இப்போது Animation பக் சரியாகி விடும்.