இந்த நிலையில் தென் கொரிய நாடகங்களைப் பார்த்ததற்காக, வடகொரியாவைச் சேர்ந்த 30 சிறுவர்களுக்கு கிம் ஜாங் உன் மரண தண்டனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
உலகின் ஏனைய நாடுகளுக்கும் வடகொரியாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருப்பதில்லை. இதன் காரணமாக உலகின் ஏனைய நாடுகளில் என்ன நடக்கிறது என்பது வடகொரிய மக்களுக்குத் தெரியாது.
இந்த அடிப்படையில் தென் கொரிய நாடகங்களைப் பார்த்ததற்காக 30 சிறுவர்களுக்கு, வட கொரியா மரண தண்டனை விதித்துள்ளதாகத் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை முக்கிய எதிரி நாடாக அறிவித்தார். குறிப்பாகத் தென் கொரிய தொடர் நாடகங்களைக் கூட பார்க்கக் கூடாது என்று வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தத் தடைகளைத் தாண்டி அங்கு Pen Drive மூலமாக இந்தத் தொடர் நாடகங்கள் வடகொரியாவிற்குள் கொண்டுவரப்படுகின்றன என்பதுடன், இதற்கு முன்னரும் பல இளைஞர்களுக்கு, தென்கொரிய நாடகங்கள், திரைப்படங்கள் என்பவற்றைப் பார்த்ததற்காகவும் பாடல்கள் சிலவற்றைக் கேட்டதற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.