தற்போதைய காலகட்டத்தில் அதிக மாசு, வெப்பம், ஆரோக்கியமற்ற உணவுமுறைகள் போன்றவற்றால் முடி உதிர்வு பிரச்சினைக்கு அதிகளவிலானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை இயற்கையான முறைகளினால் நிவர்த்தி செய்யும் முறை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்!
ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஆளி விதைகள் பெரிதும் பங்காற்றுகிறது. ஆளி விதைகளில் Vittamin B , E மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறன. இது மென்மையான முடி அமைப்பை பராமரிக்கின்றது.
ஆளிவிதையில் 18 முதல் 24 சதவீதம் புரதம் உள்ளது. இதனால் தலைமுடியின் வேர்க்கால்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன. மேலும் இதில் உள்ள Vitamin E இளவயதில் ஏற்படும் நரையைத் தடுக்க உதவுகிறது. இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து நல்ல முடிவளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆளி விதை எண்ணெயை எடுத்து உங்கள் கூந்தல் முழுவதுமாக தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு ஒருமுறை செய்தால் முடி நன்கு அடர்த்தியாக வளர்ச்சியடையும்.
ஆளி விதைப் பொடியும் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. ஆளி விதையை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை தயிரில் கலந்து வேர்க்கால்களில் நன்றாக படும்படி தடவி மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளிக்கவும்.
இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் முடி அடர்த்தி பெறும். ஆகவே ஆளிவிதையைப் பயன்படுத்தி உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக பராமரித்திடுங்கள்.