கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பம் அதிகரிப்பதால் அனைவருக்குமே உடல் எளிதில் வெப்பமடைந்து அதிக வியர்வை மற்றும் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது. இலந்தைப் பழம் இயற்கையிலேயே குளிர்ச்சித் தன்மையைக் கொண்டுள்ளது. எனவே உடல் உஷ்ணத்தைத் தணிப்பதற்கு இலந்தைப் பழம் பெரிதும் உதவுகின்றது.
இலந்தைப் பழத்தை சாப்பிட்டால் எலும்புகள் உறுதிபெறும். இரத்த அழுத்தம் சீராகும். அத்துடன் இரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
இலந்தைப் பழத்தில் புரதம், தாதுக்கள், இரும்புச் சத்துக்கள் என்பன அதிகளவில் உள்ளன. இலந்தைப் பழத்தின் விதையை நீக்கி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் சிறிதளவு தண்ணீரைக் கலந்து பருகினால்,நிறைவான நித்திரை மற்றும் சருமப் பொலிவு என்பன உண்டாகும். அத்துடன் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி சருமம் இளமையாகக் காணப்படும்.
இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி வைத்துக்கொண்டு காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உண்டாகும் அதிக இரத்தப் போக்கை தடுக்கவும் இலந்தைப் பழம் பயன்படுகிறது.
எனவே வாரம் இருமுறை இலந்தைப் பழத்தை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்திக் கொள்வோம்.