பயணங்களைத் திட்டமிடும்போது Google Maps இல் இருப்பிடங்களைச் சேமிப்பதன் மூலம் உங்கள் நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்தலாம். உங்களுக்குப் பிடித்த உணவகங்கள், நீங்கள் செல்ல விரும்பும் இடங்கள் அல்லது நீங்கள் சென்ற இடங்கள் ஆகியவற்றை தேடுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்படலாம் அல்லது மறந்தும் போகலாம்.
இந்த இடங்களை எளிதாகவும், விரைவாகவும் கண்டுபிடிக்க Google Mapsஇல் உள்ள எளிமையான ‘Save ’ அம்சத்தை பயன்படுத்தி, நீங்கள் சேமித்த அனைத்து இடங்களின் பட்டியலை உருவாக்கிக்கொள்ள முடியும். Google Maps இல் இருப்பிடத்தை எவ்வாறு சேமிப்பது என்பதை அறிந்துகொள்வோம்.
1. உங்கள் மொபைலில் Google Maps App ஐ திறக்கவும்.
2. நீங்கள் சேமிக்க விரும்பும் இடத்தைத் தேடுவதன் மூலமோ அல்லது Maps இல் பிரௌஸ் செய்வதன் மூலமோ கண்டுபிடிக்கவும்.
3. விபரங்கள் பக்கத்தை திறக்க இடத்தின் பெயர் அல்லது மார்க்கரை கிளிக் செய்யவும்.
4. ஸ்கிரீனின் கீழ் பகுதியில் “Save ” பட்டனை கிளிக் செய்யவும்.
5. Desktop செயற்பாடும் இதுபோன்றே இருக்கும், இடத்தைச் சேமிக்க அல்லது புதிய பட்டியலை உருவாக்க பட்டியலைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கே, நீங்கள் சேமித்த அனைத்து இடங்களையும் பட்டியல் மூலம் வகைப்படுத்தலாம். கூடுதல் சிறப்பம்சமாக, நீங்கள் சேமித்த இடங்களின் பட்டியலைத் திருத்த Google Maps உங்களை அனுமதிக்கும். நீங்கள் அவற்றை மறுபெயரிடலாம், நீக்கலாம் அல்லது பட்டியல்களுக்கு இடையில் இடங்களை நகர்த்தலாம்.