இந்தத் திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று,100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகின்றது.
அந்தவகையில் மகாராஜா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலனுக்கும் ஏனைய படக்குழுவினருக்கும் தற்போது பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்,தற்போது நடிகர் விஜய் இயக்குநர் நித்திலனை அழைத்துப் பாராட்டியுள்ளார்.
அந்த சந்திப்புத் தொடர்பில் இயக்குநர் நித்திலன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் "அறிவூட்டும் வகையில் இருந்த இந்த சந்திப்புக்கு நன்றி.உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கும் நன்றி.மகாராஜா பற்றி நீங்கள் பேசிய விஷயங்களை கேட்டு அசந்துவிட்டேன்.உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்திற்கு நான் அதிகம் நன்றியுடன் இருப்பேன்" எனக் குறிப்பிட்டு நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.