சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படம் 38 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இத்திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகிபாபு, கோவை சரளா, தீபா வெங்கட் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம், இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடிகர் சூர்யாவின் பிறந்த தினத்தில் “கங்குவா” மற்றும் “சூர்யா44” திரைப்படங்களின் புதிய தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் ஜூலை 23 ஆம் திகதி இரசிகர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக ‘கங்குவா’ திரைப்படத்தின் First Single பாடல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலிற்கு Fire Song என தலைப்பிடப்பட்டுள்ளது.
இத்திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்பொழுது இந்த பாடல் வெளிவருவதையிட்டு இரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.