Microsoft நிறுவனத்தின் சமீபத்திய கிளவுட் சேவை செயலிழப்பு காரணமாக, பல விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை தாமதப்படுத்தியுள்ளன. மேலும், Microsoft 365 பயனர்கள் Apps மற்றும் Teams போன்ற சேவைகளை பயன்படுத்த முடியாமல் போனது.
Microsoft சேவை செயலிழப்பால் உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மென்பொருள் செயலிழப்பால் விமானம், வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிளவுட் சேவை செயலிழப்பு இன்று அதிகாலை 3:26 மணிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் இது தற்போது சீர் செய்யப்பட்டுவருவதாக Microsoft நிறுவனம் தெரிவித்துள்ளது.
Microsoft Defender, Intune, OneNote மற்றும் SharePoint Online போன்ற சில சேவைகளை Microsoft சீர் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இருப்பினும் PowerBI, Fabric, Teams, Purview மற்றும் Viva Engage போன்ற டூல்கள் இன்னும் செயற்படவில்லை.
இந்நிலையில் Microsoft நிறுவனம் நிலைமையை சீர்செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.