இது காலப்போக்கில், கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு நோய் என பலவிதமான நோய்களுக்கு வழிவகுத்து விடுகின்றது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களின் எலும்புகள் பலவீனம் அடைவதால், பெரிய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். எனவே,பெண்கள் தங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைவாக கிடைக்க வேண்டும். எனவே, பெண்கள் தினமும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரத உணவுகள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த உணவுகளில் உள்ள அத்தியாவசிய தாதுக்கள், விட்டமின்கள், நார்ச்சத்துகள் என்பன நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.
எனவே தினமும் பருப்பு வகைகள், முழு தானியங்கள், கீரை, காய்ந்த பழங்கள் , தானியங்கள், கோழி, முட்டை,சிவப்பு இறைச்சி, கடல் உணவுகள் போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது அவசியம்.
எலும்பு ஆரோக்கியத்துக்கு கல்சியம் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும்.ஆனால்,பெண்களுக்கு வயதாகும் போது,உடலில் கல்சியத்தின் அளவு குறைந்துவிடுவதால், எலும்புகளின் உறுதி குறையத் தொடங்குகிறது.
இது எலும்பு பலமிழப்பு, மூட்டு வலி, முதுகு வலி, போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, தயிர், சோயா பால், சியா விதைகள், பால், சீஸ் , பாதாம் போன்ற கல்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருந்தால், குறைந்த எலும்பு அடர்த்தி, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இவற்றை தவிர்க்க முட்டை, சீஸ், பால், தயிர், ஓட்ஸ், காளான், சால்மன், கானாங்கெளுத்தி, இறால் போன்ற உணவுகளை அன்றாடம் சாப்பிட வேண்டும். இவ்வகை உணவுகளில் விட்டமின் டி சத்து அதிகம் உள்ளது.
உடல் எடையை கட்டுக்குள் வைத்தாலே நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.பெண்கள் இந்த உணவுக் குறிப்புகளைப் பின்பற்றி ஆரோக்கியமாக வாழலாம்.