இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இத்திரைப்படம் நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தில், அக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் First Look ஐ படக்குழுவினர் வெளியிட்ட நிலையில், இப்பொழுது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தல அஜித் சில வருடங்களாக Salt & Pepper தோற்றத்தில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த போஸ்டரில் கறுப்பு நிற முடியுடன் காணப்படுகிறார்.
அஜித் அவருடைய பழைய தோற்றத்தில் காணப்படுவதால் இந்த போஸ்டர் இரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனால் இரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் சமூக வலைத்தளங்களில், இந்த போஸ்டரை பகிர்ந்து வருகின்றனர்.