கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் வெளியான நாளில், படத்தின் முழுமையான நேரம் குறித்து இரசிகர்கள் பலரும் விமர்சித்த நிலையில் திரைப்படத்திலிருந்து 11 நிமிடக் காட்சிகளை நீக்கி, தற்போது திரையிடப்பட்டு வருகிறது. இதேவேளை இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளில் சுமார் 26 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும். இரண்டாவது நாளில் கிட்டத்தட்ட ரூபாய் 17 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தநிலையில் உலகளவில் 'இந்தியன் 2' திரைப்படம் கடந்த 9 நாட்களில் மாத்திரம் இந்திய மதிப்பில் ரூ. 148 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.