இந்தியாவுக்கு எதிராக கண்டி பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு இருபது தொடரில் இலங்கை அணியில் அறிமுக வீரராக சமிந்து விக்ரமசிங்க இணைக்கப்பட்டுள்ளார்.
இடம்பெற்றுவரும் லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் சமிந்து விக்ரமசிங்க சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் மூலம் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தொடரில் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே சர்வதேச T20 போட்டிகளில் அறிமுகமாவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தீக்ஷனவுக்குப் பதிலாக அவர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறன.
இந்திய அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள இலங்கை குழாமில் சரித் அசலங்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, சமிந்து விக்ரமசிங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, துஷ்மன்த சமீர, மதீஷ பத்திரண, அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.