பயனர்களே எதிர்பார்க்காத புதுப்புது வசதிகளை WhatsApp நிறுவனம் அடிக்கடி வெளியிட்டு வருகிறது. தற்போது மற்றுமொரு வசதியை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சர்வதேச தகவல் தொடர்பு செயலியாக WhatsApp காணப்படுகிறது. WhatsApp செயலியிலும் Instagramஇல் உள்ளது போன்ற பல வசதிகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கின்ற மகிழ்ச்சியான செய்தியை பயனர்களுக்கு WhatsApp அறிவித்துள்ளது
WhatsApp பயனர்கள் தற்போது தங்கள் ஃப்ரொபைல் பெயரை உருவாக்க முடியும். இதன் மூலம், தாங்கள் யார் என்று தெரிவிக்காமலேயே மற்றொருவரைத் தொடர்பு கொள்ள முடியும். இதனால், பயனர்களின் பாதுகாப்பு அதிகரிக்கும்.
ஏனைய சமூக ஊடக செயலிகளைப் போலவே செயற்படும் அம்சமான இந்த சிறப்பம்சத்தை, மொபைலிலும் அறிமுகப்படுத்தினால் பாதுகாப்பு அதிகரிக்கும். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் WhatsApp பயனர்களின் பெயர்கள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
பிற சமூக ஊடகப் பயன்பாடுகளைப் போல அல்லாமல், ஒருவரின் மொபைல் எண் அல்லது பெயருடன் தொடர்புடைய குறியீடு எதுவும் இருக்காத பெயராக இருக்கும். இதன் மூலம், யார் தகவல் அனுப்புகிறார்கள் என்பதை வெளி மனிதர்களால் கண்டுபிடிக்க முடியாது.