YouTube Channel மூலமாக அதிகளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகளவான இளைஞர்கள் வேகமாக வாகனத்தை இயக்குவது, சாகசம் செய்வது, ஆபத்தான சுற்றுலாத் தளங்களுக்கு செல்வது, போன்ற சவாலான செயல்களை செய்து பாரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் சீனாவில் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் , தனது YouTube Channel இல், நேரலையில் அளவுக்கதிகமாக உணவை உட்கொண்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவு உட்கொள்ளும் பல காணொளிகளை பதிவேற்றம் செய்து பிரபலமான குறித்த பெண் அதிகளவில் உணவுகளை உட்கொண்டு அதனை தனது YouTube Channel இல் நேரலையில் ஒளிபரப்பி வந்துள்ளார்.
அதிகளவில் உணவுகளை உட்கொண்டதன் காரணமாக அவருடைய உடல் எடை 120 கிலோகிராம் வரை அதிகரித்ததுடன் அவருக்கு உணவு செரிமானக் கோளாறும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அளவுக்கதிகமான உணவை உட்கொண்டமையினால் அவரது வயிறு சிதைந்துவிட்டதாகவும், செரிமானமடையாத உணவுகள் அதிகளவில் இருந்தமையினால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.