மகத்தான ஆரோக்கியத்தைத் தரும் காய்கறிகளில் அவரைக்காயும் ஒன்றாகும். இந்த அவரைக்காயை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படுவதுடன் பல நோய்களின் தாக்கங்களும் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே அவரைக்காயிலுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம்.
அவரைக்காயில் உள்ள நார்ச்சத்து எமது உடல் உறுப்புக்களை பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்துடன் அவரைக்காயை உட்கொள்வதன் மூலம் மலச்சிக்கலும் தடுக்கப்படும்.
அவரைக்காயிலுள்ள புரதச்சத்துக்கள் எமது உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவுகின்றது. இதனால் அதிக உடல் எடையைக் கொண்டவர்கள் விரைவாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
நீரிழிவு நோயாளர்கள் அவரைக்காயை உட்கொள்வதன் மூலமாக உடலில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் சிறுநீரகப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவரைக்காயை உண்பதனால் விரைவாகக் குணமாகலாம்.
எனவே நமது அன்றாட உணவில் அவரைக்காயை சேர்த்து உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்.