Google அதன் போட்டோஸ் அப்ளிகேஷனில் அனைவரும் விரும்பும்படியான ஒரு புதிய அம்சத்தை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. Android வெளியிட்ட அறிக்கையின்படி, Google போட்டோஸ் விரைவில் My Week என்ற ஒரு புதிய ஷேரிங் அம்சத்தை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த அம்சத்தை பயன்படுத்தி யூசர்கள் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வார நினைவுகளை பகிரலாம். இது கிட்டத்தட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் அம்சத்தைப் போன்றது. போட்டோக்களை தெரிவு செய்து அதனை ஹைலைட் செய்வதன் மூலமாக இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டோரீஸ் போலவே பிற Google ஃபோட்டோஸ் பயனர்களுக்கு தங்களுடைய வார நினைவுகளை பார்க்கும்படி அழைப்புகளைக் கொடுக்கும் அம்சம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக புகைப் படங்களைச் சேர்க்கவோ அல்லது நீங்கள் அழைப்பு விடுத்த நபர்களுக்கு மெசேஜ்களை அனுப்பவும் முடியும். அவர்கள் உங்களுடைய போட்டோக்களுக்கு லைக் செய்து, அதனை கமென்ட் செய்வதற்கான அனுமதியைப் பெறுவார்கள்.
அதில் போட்டோ விபரங்களுக்கான UI மாற்றங்கள் உள்ளன. இதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட போட்டோ Album அல்லது மெமரியில் உள்ளதா என்பது குறித்த விபரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.
அதே நேரத்தில் IOS மற்றும் Google நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய டேட்டா டிரான்ஸ்ஃபர் கருவியை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலமாக எந்த ஒரு சிரமமும் இல்லாமல் யூசர்கள் தங்களுடைய நினைவுகளை Google போட்டோஸில் இருந்து ICloudக்கு மாற்றிக் கொள்ளலாம்.