இந்த செய்தி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் இதற்கான காரணமும் தற்போது அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
திருமணத்திற்கு முன்னர் அலுவகத்தின் அருகில் தனியாக வசித்து வந்த குறித்த நபர் தற்போது திருமணமாகி சுமார் 320 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அலுவலகத்திற்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதனால் அதனை ஏற்றுக்கொண்டு தனது மனைவிக்காக இதனைச் செய்து வருகின்றார்.
31 வயதான இந்த நபர், தினமும் அதிகாலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, அலுவலகம் செல்வதற்காக 30 நிமிடங்கள் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வண்டியில் பயணித்து, அதன் பின்னர் தொடருந்து மூலமாக பயணம் செய்து காலை 9 மணிக்கு முன்னர் அலுவலகத்தை அடைகின்றார்.
இது தொடர்பில் அவர் கூறும்போது, “எனது மனைவிக்காக இதைச் செய்வதை நான் மிகவும் சந்தோஷமாகவே நினைக்கிறேன். பயணம் ஒன்றும் எனக்கு அவ்வளவு களைப்பாக தெரிவதில்லை” எனக் கூறியுள்ளார்.
மனைவிக்காக இந்த தியாகத்தை செய்யும் இந்த கணவரை சமூக வலைத்தளங்களில் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.