காய்கறிகளைப் போன்று பழங்களும் எமது உடல் ஆரோக்கியத்தை பலமாக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றன. எண்ணிலடங்காத நன்மைகளைத் தரும் பழங்களில் குழிப்பேரியும் ஒன்று. இந்த குழிப்பேரியிலுள்ள மருத்துவக் குணங்களைப் பற்றி இன்றைய பதிவில் அறிந்து கொள்வோம்.
குழிப்பேரியில் விட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை உட்கொள்வதன் மூலம் எமது உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
அதிக உடல் எடையைக் கொண்டவர்கள் குழிப்பேரியை வாரம் இருமுறை உட்கொள்ளலாம். இந்தப் பழம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையை சீராக வைத்துக்கொள்வதற்கு உதவுகின்றது.
குழிப்பேரியில் காணப்படும் நார்ச்சத்துக்கள் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் இந்தப் பழத்தில் உள்ள விட்டமின் A மற்றும் பீட்டா கரோட்டின் கண்பார்வையை அதிகரிக்க உதவுகின்றது. குழிப்பேரியை உண்பதன் மூலமாக கண் சார்ந்த நோய்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் சருமமும் பொலிவாகக் காணப்படும்.
எனவே வாரம் இருமுறை குழிப்பேரியை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.