நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நிலையில்,தற்போது தனது 72 ஆவது வயதிலும் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றார்.
இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இந்தத் திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுமட்டுமில்லாமல் கூலி என்ற திரைப்படத்திலும் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகின்றார்.
இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் மூத்த மகன் வேத் கிருஷ்ணா பள்ளிக்கு செல்வதற்கு அடம்பிடித்துள்ளார்.
இந்த விடயத்தை மகள்,தந்தை ரஜினிகாந்திடம் கூறியதும்,மகள் வீட்டிற்கு தன்னுடைய காரில் சென்ற ரஜினிகாந்த், அங்கு தனது பேரனை சமாதானப்படுத்தி தன்னுடைய காரிலேயே பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பேரனை காரில் அழைத்துச் சென்றது மட்டுமின்றி, தனது பேரனின் வகுப்பறைக்குச் சென்றும் பார்வையிட்டுள்ளார்.இதனை அவதானித்த அந்த பள்ளியில் இருந்த சக குழந்தைகள் உற்சாகத்தில் திகைத்துள்ளனர்.
குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள சௌந்தர்யா, நடிப்பிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி எதைக் கொடுத்தாலும் அதை சரியாகச் செய்வதில் நீங்கள் வல்லவர் என குறிப்பிட்டு சிறந்த தாத்தா, சிறந்த அப்பா என பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.