2010 ஆம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாகப் பல விருதுகளைக் குவித்த திரைப்படம் 'மைனா'. இத்திரைப்படத்தில் விதார்த் மற்றும் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, 'கும்கி', 'கயல்' மற்றும் 'தொடரி' போன்ற வெற்றிப்படங்களை பிரபு சாலமன் இயக்கியிருந்தார். கடைசியாக 'செம்பி' திரைப்படத்தை இயக்கினார்.இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இந்நிலையில், இயக்குநர் பிரபு சாலமனின் அடுத்த புதிய திரைப்படத்தின் First Look Poster வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு 'மாம்போ' என பெயரிடப்பட்டுள்ளது.
இது ஒரு சிறுவனுக்கும், சிங்கத்திற்கும் இடையே உள்ள நட்பைப் பிரதிபலிக்கும் படமாக அமைந்துள்ளது.இத்திரைப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க உண்மையான சிங்கத்தை வைத்து எந்த வித Graphics காட்சிகளும் இல்லாமல் படமாக்கப்படுகிறது. இதற்காகவே,விஜய் ஸ்ரீ ஹரி சிங்கத்துடன் சிறப்புப் பயிற்சிகள் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசியாவிலேயே உண்மையான சிங்கத்தை வைத்துப் படமாக்கப்படும் முதல் திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.