Sooriyan Gossip - ரோஹித் சர்மாவின் தலைமைத்துவத்தின் கீழ் விளையாடியது பெருமை - ஜஸ்ப்ரிட் பும்ரா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
450 Views
ரோஹித் சர்மாவின் தலைமைத்துவம் சற்று வித்தியாசமானது என்றும்,இளம் வீரர்களின் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து, அவர்களின் இடத்தில் தன்னைப் பொருத்தி பார்ப்பவர் தான் ரோஹித் ஷர்மா என்றும் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா புகழ்ந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - ரோஹித் தவறுகளில் இருந்து தான் அதிகம் கற்றுக் கொள்வார். அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் கருத்தையும் கேட்டுக் கொண்டு, தேவையானவற்றை செயற்படுத்துவார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் நீண்ட காலம் விளையாடியது எனக்கு பெருமையான விடயமென பும்ரா தெரிவித்துள்ளார்.