Google அக்கவுண்ட், ஜிமெயில் சேவைகளின் பாஸ்வேர்ட்டை அவ்வப்போது மாற்ற வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிகவும் பிரபலமான Google ப்ரௌசர் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது.Google பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. ஜிமெயில், ப்ளே ஸ்டோர், Google போட்டோஸ், Google மீட் எனப் பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
Google அக்கவுண்ட்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது மிகவும் முக்கியம். போன், லேப்டொப், கணினி என எல்லாவற்றிலும் உங்கள் Google அக்கவுண்டை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். அந்த வகையில் Google அக்கவுண்ட் சேவையின் பாஸ்வேர்ட்டை அவ்வப்போது மாற்றுவதன் மூலம் ஹெக்கிங் பிரச்சினைகள் தடுக்கப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Google அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை சீரான இடைவெளியில் மாற்றுவதன் மூலம் உங்கள் அக்கவுண்ட் ஹெக் செய்யப்படுவதைத் தடுக்கலாம். அந்த வகையில், Google அக்கவுண்ட் பாஸ்வேர்ட்டை மாற்ற, பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.
1.உங்கள் போனில் டிவைஸ் செட்டிங்கிற்கு செல்லவும்.
2. “Google” என்ற ஒப்ஷனை தேர்வு செய்து “Manage your google Account” என்பதை தேர்வு செய்யவும்
3. அதில் Security என்ற ஒப்ஷனை தேர்வு செய்து பாஸ்வேர்ட் என்ற ஒப்ஷனுக்கு சென்று “Change Password” என்ற ஒப்ஷனை தேர்வு செய்து உங்களது புதிய பாஸ்வேர்டை கொடுத்து மாற்றலாம்.