போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில், 141 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பில், துடுப்பாட்டத்தில் 63 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்த இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.
இதனடிப்படையில், மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை நாளை எதிர்கொள்ளவுள்ளது.