உலகளவில் ஹொலிவுட் திரைப்படங்கள் அதிக வசூல் செய்யும் திரைப்படங்களாகவே
காணப்படுகின்றன. அந்த வகையில், பிரபல அனிமேஷன் திரைப்படமான 'Inside Out 2' திரைப்படம் வெளியாகி, 19 நாட்களில் 1.462 பில்லியன் டொலர் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் இதுவரை வெளியான அனிமேஷன் படங்களிலேயே அதிக வசூலை குவித்த திரைப்படமாக 'Inside Out 2' சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு வெளியான 'Frozen 2' திரைப்படம் 1.45 பில்லியன் டொலரை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இப்போது அந்தச் சாதனையை 'Inside Out 2' முறியடித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு வெளியான 'Inside Out' திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் 859 மில்லியன் டொலர் வசூல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில்,இந்த ஆண்டில் 1 பில்லியன் டொலருக்கு மேல் வசூல் செய்த ஒரே திரைப்படம் என்ற பெருமை 'Inside Out 2' திரைப்படத்திற்கே கிடைத்திருக்கின்றது.