போஸ் வெங்கட் சின்னத் திரையில் அறிமுகமாகி, பின் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து, மக்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்துக்கொண்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு "கன்னி மாடம்" என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகினார். தற்போது போஸ் வெங்கட் இயக்கத்தில் 'சார்' திரைப்படம் உருவாகி வருகின்றது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக 'சார்' திரைப்படத்தின் Teaser வெளியான நிலையில் அதனைத்தொடர்ந்து முதல் பாடலும் வெளியானது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெறும் 'பூவாசனை' என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
விவேகாவின் வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ள இந்தப் பாடலை நடிகர்களான அதர்வா மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.