மிகக் குறைந்த உணவுகளில் தான் விட்டமின் டி இருக்கின்றது. அதில் முக்கியமான ஒரு உணவு தான் காளான்.
இந்தக் காளானை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்,அதனால் எமது மூளையில் நடக்கும் மாற்றங்கள் எவை என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நமது மூளை சுறுசுறுப்பாக இயங்குவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.
காளானில் உள்ள Bio Active என்ற மூலக்கூறு மூளையின் செயற்பாட்டை மேம்படுத்துவது மட்டுமின்றி நினைவாற்றலையும் மேம்படுத்துகின்றது.
காளானில் Antioxidant அதிக அளவு காணப்படுகின்றது.
இந்த Antioxidant மற்றும் ஒக்சிஜனேற்றப் பண்புகள் மூளை மற்றும் அதன் நரம்புகளில் ஏற்படும் ஒக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து நரம்புகளைப் பாதுகாக்கின்றது.
ஆகவே காளானை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அது மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்வதுடன் மூளையின் செல்களுக்கு இரத்த ஓட்டத்தை சீராக எடுத்துச் செல்கின்றது.
எனவே விட்டமின் டி குறைபாடுடையவர்கள், நினைவாற்றலை பலமடங்கு அதிகரிக்க நினைப்பவர்கள் மற்றும் நரம்பு அழுத்தங்களை குறைக்க எண்ணுபவர்களுக்கு காளான் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.