மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இணைந்து பசியுடன் உலாவரும் கழுதைப் புலிகளுக்கு உணவளிக்கும் காட்சிகள் குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.
ஆபிரிக்க கண்டத்தில் உள்ள எத்தியோப்பிய நாட்டிலுள்ள வனப்பகுதி ஒன்றில் இந்தக் காணொளி பதிவாகியுள்ளது.
வேட்டையாடி உணவைப் பெற்றுக்கொள்ளும் இனமான கழுதைப்புலிகளுக்கு குறித்த காணொளியில் உள்ள ஆண் எவ்வித பயமும் இன்றி உணவளிக்கின்ற அதேவேளை, அருகில் இருந்த பெண் மிகுந்த பயத்துடன் உணவளிக்கின்றார்.
இந்த நிலையில் இந்தக் காணொளி தற்போது வைரலாகி வருவதுடன், காட்டு விலங்குகளுக்கு இடையூறு விளைவிப்பதால் ஏற்படும் பாதுகாப்பு குறைபாடு மற்றும் நெறிமுறை மீறல்கள் குறித்த சூடான விவாதத்தை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.