டெலிகிராம் செயலியில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், ஹெக்கர்கள் அதை எளிதாகப் பயன்படுத்தி, உங்களது தரவுகளை எடுக்கும் ஆபத்து இருப்பது தெரியவந்துள்ளது.
டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் Androidக்கான செயலியில் ஒரு புதிய பாதுகாப்பு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் டெலிகிராம் செயலியை பயன்படுத்துவோரின் தரவு மற்றும் சாதனத்தை ஹெக்கர்கள் எளிதாக அணுக முடியும் என்று கூறப்படுகிறது.
‘EvilVideo’ என்று அழைக்கப்படும் ஒரு சிக்கலை ESET குழு கண்டறிந்துள்ளது. டெலிகிராமில் Chat மூலம் தீங்கிழைக்கும் கோப்புகள் மற்றும் வீடியோக்களை அனுப்புவதன் மூலம் ஹெக்கர்கள் உங்கள் சாதனத்திற்குள் ஊடுருவி தரவுகளை திருடும் ஆபத்துள்ளது.
இந்தக் குறைபாடு 10.14.5 க்கு முன் பழைய டெலிகிராம் பதிப்பை பெரிதும் பாதிக்கிறது, எனவே, டெலிகிராம் பயன்படுத்தும் அனைவரும் உடனடியாக பயன்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும்.
டெலிகிராம் செனல்களில் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பலாம். இதை பயன்படுத்தியே ஹெக்கர்கள் உள்ளே நுழைவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே Telegram 10.14.5 இன் புதிய பதிப்பு இதற்கான தீர்வைக் கொடுத்துள்ளது. மேலும் Play Store இல் இருந்து புதிய பதிப்பிற்கு உடனடியாகப் புதுப்பிக்குமாறு அனைத்து டெலிகிராம் பயனர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.