திருடுவதற்காக ஆளில்லா வீடொன்றுக்குச் சென்ற திருடன் ஒருவன், அந்த வீட்டில் செய்த செயல் CCTV காணொளிகளில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த சுவாரஸ்யமான சம்பவம் இந்தியாவின் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்திலுள்ள கிராமப் பகுதியொன்றில் ஆளில்லா வீடொன்றிற்குள் தனது முகத்தை மறைத்தபடி நுழைந்த திருடன் வீடு முழுவதும் தேடியும் எங்கும் பணம் இல்லாததனால் மிகுந்த கோபத்திற்குள்ளாகிய நிலையில் காணப்பட்டான்.
இறுதியில் அந்த வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் இருந்த நீரை அருந்திய அந்தத் திருடன், தான் அருந்திய நீருக்கான கட்டணமாக 20 ரூபாவை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டுச் சென்றிருந்தான். இந்தக் காட்சி அந்த வீட்டில் இருந்த CCTV காணொளியில் பதிவாகியிருந்ததுடன் அதனை குறித்த வீட்டின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் காட்சி பலரையும் கவர்ந்துள்ளதோடு தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.