Google நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து தரம் குறைந்த (Low-Quality) மற்றும் செயற்படாத Appகளை (Non-Functional) விரைவில் நீக்கப் போகிறது. இந்த நடவடிக்கையை, அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ள Google நிறுவனம், இதற்காக தனது Spam and Minimum Functionality பொலிசியை அப்டேட் செய்துள்ளது.
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலம் ஸ்டேபிலிட்டி, பதிலளிக்கக்கூடிய தன்மை மற்றும் ஈடுபாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த Google நிறுவனம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இந்த கொள்கையின் கீழ், Google இன் உயர் தரநிலைகளைக் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட Appகளை மட்டுமே Play Store இல் யூஸர்கள் பெறுவதை Google நிறுவனம் உறுதி செய்துள்ளது.
தரம் குறைந்த Appகளை நீக்குவதற்கான பணிகளை Google நிறுவனம் அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. அதேநேரம் பிற Appகளின் குளோன்களாக இருக்கும் அல்லது உண்மையான செயற்பாட்டை வழங்காத Appகளை Google நீக்கக் கூடும்.
விளம்பர வருவாயை ஈட்டுவதற்காக எளிமையாக வடிவமைக்கப்பட்ட Appகளும் Google இன் Remove List இல் இருக்க வாய்ப்புள்ளது. Google இன் இந்த நடவடிக்கை யூஸர்கள் மற்றும் டெவலப்பர்கள் என இரு தரப்புகளுக்கும் பயனுடையதாக இருக்கும்.
இந்த அம்சம் Play Store இல் உள்ள Appகளின் தரத்தை மேம்படுத்த உதவும், மேலும் யூஸர்கள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் Appகளை கண்டறிவதை எளிதாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். வரவிருக்கும் Google இன் Cleanup Activities அதிக எண்ணிக்கையிலான Appகளை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.