உலகில் சிறப்புத் திறமைகள் கொண்டவர்கள் பலர் காணப்படுகின்றார்கள். மேலும் அவர்களின் தனித்துவமான இந்தத் திறமைகளினால், அவர்கள் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கின்றார்கள்.
தற்போது இவ்வாறான ஒரு தனித்துவமான திறமை கொண்ட ஒரு நபரின் கின்னஸ் சாதனை தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
கறுப்பு நிறத் துணி ஒன்றினால் கண்களைக் கட்டிக்கொண்டு, ஒரு நிமிடத்தில் 9 தக்காளியை வெட்டி குறித்த நபர் உலக சாதனை படைத்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த பிரபலமான சமையற்கலை நிபுணர் ஒருவரே இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
இதன் மூலம் கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடத்தில் அதிக அளவிலான தக்காளிப் பழங்களை வெட்டிய நபர் என்ற கின்னஸ் உலக சாதனையை இவர் படைத்துள்ளார்.
குறித்த நபர் ஏற்கனவே 30 விநாடிகளில் கண்களை மூடிக்கொண்டு 166 வெள்ளரிக்காய்களை வெட்டியிருந்ததுடன் அதுவும் ஒரு சாதனையாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.