மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்று மெசேஜ்களுக்கு உடனடியாக ரியாக்ட் செய்யும் வகையில், புதிய வசதியை WhatsApp அறிமுகம் செய்யவுள்ளது.
அந்த Appகளைப் போன்று இதிலும் மெசேஜை டபுள்-டெப் செய்தால் ஹொர்ட் இமோஜியுடன் ரியாக்ட் செய்யப்படும். இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் வரும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த அம்சம் பயனர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp கடந்த வாரத்தில் ரீஷேர் ஸ்டேட்டஸ் வசதி மற்றும் நியர்பை ஷேர் போன்ற அம்சங்களை அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.