இந்தியாவில் வடபகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினுள் புகுந்த, சுமார் 6 அடி நீளமான பாம்பினைப் பெண் ஒருவர் எவ்வித பயமும் இன்றி வெறும் கைகளினால் பிடித்து அதனை பாதுகாப்பாக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
புத்தகங்கள் மற்றும் கணினி என்பன வைக்கப்பட்டிருந்த மேசையொன்றுக்குப் பின்னால், பாம்பொன்று இருந்ததை அவதானித்த குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள், உடனடியாக அதனை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்காக பாம்பு பிடி வீரர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பாம்பு பிடி வீரர்கள் குழாத்தில் இருந்து பெண் ஒருவர் அவ்விடத்திற்கு விரைந்து வந்து குறித்த பாம்பினைப் பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண்ணின் வீரம் மற்றும் திறமைக்கு பலரும் தங்களது பாராட்டுக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.